அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் கடற்பரப்பில் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, பின்னர் அந்த உத்தரவை வாபஸ் பெற்றார். ஏற்கனவே ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, புதிய தடைகளை விதித்துள்ளது. யாருடனும் தாங்கள் சண்டையிட விரும்பவில்லை என்றும், ஆனால் வான் எல்லைகளுக்குள் அந்நிய நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பணியை 10 நாட்களில் தொடங்கப் போவதாக அதிரடியாக அறிவித்து இருப்பதால், வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Exit mobile version