அமெரிக்காவில் மீண்டும் H-1B விசா சிறப்பு பரிசீலனை நாளை தொடங்கும்: அமெரிக்க குடியுரிமை அமைச்சகம்

அமெரிக்காவில் மீண்டும் எச் 1 பி விசா சிறப்பு பரிசீலனை நாளை தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எச்-1 பி’ விசா வழங்கப்பட்டு வந்தது. அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணி அமர்த்துவது வழக்கம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அமெரிக்க அரசு 65ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் வழங்குவதற்கான சிறப்பு பரிசீலனையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் மறுபடியும் ‘எச்-1 பி’ விசா பரிசீலனை தொடங்க உள்ளது. இந்த பரிசீலனை நாளை தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்து உள்ளது.

Exit mobile version