ட்ரம்புடன் இந்தியா வரும் அமெரிக்க குழு: முக்கிய நபர்கள் யார் யார்?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அவரது மகள் இவாங்கா, மருமகன் குஷ்னெர் ஆகியோர் இடம்பெற்றுள்ள, 12 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவும் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியாவுடன், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்நிலையில், டிரம்ப்புடன் 12 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவும் இந்தியா வருகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ், ட்ரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரீட் குஷ்னெர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் நடைபெறும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில், இக்குழுவினர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version