பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், ஜப்பானின் ஒசாகா நகரில், ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். அதற்கு முன்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி வந்த போம்பியோவுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியை அவர் இன்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள், ஏற்றுமதி, இறக்குமதி வரிவிதிப்பு, பயங்கரவாதம், ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரம், ஹெச்-1 பி விசா மற்றும் ஹெச்-4 விசா தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

Exit mobile version