விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா உடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் பரிசோதித்துள்ளது. இந்தியா மீதான செயற்கைகோள் தாக்குதல்களை முறியடிக்கும் முயற்சியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சர்வதேச விண்வெளி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைமூலம் எந்த நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, இந்தியாவின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.இந்தியாவுடனான விண்வெளி ஆய்வு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்றும் அறிவித்துள்ளது.