தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 9புள்ளி19 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
டெல்லியில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 5-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டபடி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9 புள்ளி19 டி.எம்.சி. தண்ணீரை, திறந்து விடுமாறு தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர். தாமதமின்றி, உடனடியாக தண்ணீர் திறந்து விடவும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர், காவிரி நீர் தொடர்பான தங்கள் தரப்பு புள்ளி விவரங்களை, 4 மாநில பிரதிநிதிகளும் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.