வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்! 2 வாரத்தில் ரிசல்ட் வெளியிட்ட UPSC!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உட்பட 24 இந்திய குடிமை பணிகளுக்கு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளான ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஐ எஃப் எஸ், உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 14 ஆயிரத்து 624 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு, அடுத்ததாக நடைபெற உள்ள முதன்மை தேர்வுக்கான அழைப்பு கடிதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அனுப்பப்படும். இந்த தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறலாம் என யூ பி எஸ் சி தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் இந்தியாவின் உயர் பதவிகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

Exit mobile version