தமிழ்நாட்டில் 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர், பொதுமக்களை தொற்றில் இருந்து காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால், கொரோனா தொற்றுக்கு காவல்துறையினர் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 30 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 143 காவலர்கள் உயிரிழந்து இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரானுக்கு 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 346 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 98 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 70 காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுல்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version