ராஜாங்குளத்தை மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ராஜாங்குளத்தை மேம்படுத்தும் பணியைச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ராஜாங்குளம். ஆறு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இது, மிகவும் பழமை வாய்ந்த குளமாகும். தற்போது, இந்தக் குளம், குப்பைகள் மற்றும் கழிவுகள் படிந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் காட்சியளிக்கிறது. எனவே, குளத்தை தூய்மைப்படுத்தி, அப்பகுதியில் நடைபாதை அமைத்து தர வேண்டுமென, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், குளத்தை மேம்படுத்துவதற்காக, அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Exit mobile version