ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கான மசோதா நேற்று மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மக்களவையிலும் அதற்கான மசோதாவை அமித் ஷா இன்று தாக்கல் செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாக்களும் உடனடியாக சபையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு மிக சரியானது என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், இதனை அரசியலாக மாற்ற வேண்டாம் எனவும், தற்போதைய சூழ்நிலையில் இது மிக அவசியமான முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.