பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும்: தேனி மாவட்ட ஆட்சியர்

கைவிடப்பட்டு திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுர்ஜித், தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்யவும் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version