முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம், நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் திட்டத்தில் சில மண்டலங்களி செய்யல்படுத்தப்படாத நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொலைதூர பயணத்தின் போது ரயிலில் பயணிப்போரும், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற முடியும் என்றும், இந்த செயலியை இதுவரை 45 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 80 ஆயிரம் டிக்கெட்டுகளை பயணிகள் வாங்கி வருவதாகத் தெரிவித்தார்.
இந்த செயலியில் ஒரே நேரத்தில் 4 டிக்கெட்டுகளை பயணிகள் பெற முடியும் என்றும், ரயில் டிக்கெட்டுகளை மட்டுமல்லாமல், நடைமேடை டிக்கெட்டுகள், மாதாந்திர பயணிகள் பாஸ்கள் ஆகியவற்றையும் பெற முடியும். இத்தகைய டிக்கெட்டுகள் விற்பனையின் மூலம், ரயில்வேக்கு நாளொன்றுக்கு 45 லட்சம் வருவாய் கிடைப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.