வேலூர் ஜலக்காம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ள பெருக்கு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள ஜலக்காம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் அருகே உள்ள முருகன் கோயில் ஜலக்காம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமாபட்டு, ஜெடையனூர், குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஜலக்காம்பாறை அருவியைக்காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Exit mobile version