ஜூலை முதல் வாரத்தில் மீன்வளப் பல்கலைகழகத்தின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பெலிக்ஸ் தெரிவித்தார்.
ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு 2019 என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலை கழகம், உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு சங்கத்தின் ஆசிய தொகுப்பு இணைந்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் பெலிக்ஸ், மீன் வளர்ப்பு துறை சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கருத்தரங்கு இருக்கும் என்றும், பன்னாட்டு தொழில்முறையை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்றார். இந்த ஆண்டு மீன் வள பல்கழகத்தில் 8 பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஜூலை முதல் வாரத்தில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 2 ஆம் வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.