அமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் தாக்குதல்-10 பேர் பலி

அமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்துள்ளனர். தொடர் துப்பாக்கி சூடு சம்பவத்தால் அமெரிக்காவில் பதற்றம் நீடிக்கிறது.

ஓகியோ மாகாணத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தினர். அமெரிக்க நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு நடைபெற்ற, இச்சம்பவம் குறித்து அமேரிக்காவின் புலனாய்வு பிரிவான எஃப்.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதே போன்று அமேரிக்க நேரப்படி காலை 11 மணி அளவில், டெக்சாஸில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் துப்பாக்கி சூடு சம்பவத்தால் அமேரிக்காவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version