பிரிட்டனிடம் இருந்து அடிமைப்பட்டுக்கிடந்த நிலையில், 1776 ல் விடுதலை பெற்றது யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் அமெரிக்கா.
அமெரிக்காவின் பரப்பு 37 லட்சத்து 90 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். கிட்டத்தட்ட சீனாவும் அமெரிக்காவும் ஒரே பரப்பை கொண்டுள்ளன.
அமெரிக்க மக்கள் தொகை 32 கோடியே 66 லட்சம் ஆகும். இவர்களில் வெள்ளையர்கள் 76 சதவிகிதமும், கருப்பினத்தவர்கள் 13 சதவிகிதமும், ஆசிய வம்சாவளிகள் 6 சதவிகிதமும் உள்ளனர்… அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்கள் வெறும் 1.3 சதவிகிதம் தான் அங்கே இருக்கிறார்கள்.
இவர்களில் 73 சதவிகிதம் பேர் கிறித்துவர்களாக உள்ள நிலையில், எம்மதத்தையும் சாராதவர்கள் 21 எசதவிகிதம் பேர் உள்ளனர்.
தலைநகர் வாஷிங்டன்.. பெரிய நகரம் நியூயார்க்.அமெரிக்காவில் 80 சதவிகித நிலப்பகுதிகள் அரசிடம் தான் உள்ளன. வெறும் 20 சதவிகித பகுதிகள் தான் தனியாருக்கு சொந்தமானவையாக இருக்கிறது….. 1960 களில் இன்டர்நெட் சேவையை கண்டுபிடித்த நாடு அமெரிக்கா..
அமெரிக்காவுக்கு அலுவல்மொழி என்று எதுவும் இல்லை.. ஆனால் ஆங்கிலம் அதிகம் பேசப்படும் மொழியாகவும், பிரெஞ்சு அதற்கடுத்த நிலையிலும் உள்ளது. அமெரிக்காவின் பிரபல பாஸ்ட்புட் நிறுவனம் McDonald’s… அமெரிக்கர்களில் 8 ல் ஒருவர் இந்த McDonald’s ல் பணியாற்றுகிறார்கள்…
தற்போது இருக்கும் அமெரிக்க தேசிய கொடி 17 வயது மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் குவித்த பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவே முன்னணியில் இருக்கிறது.
நீல் ஆம்ட்ராங் குழுவினர் நிலவில் கால் பதித்தை நம்மால் நம்ப முடியவில்லை இல்லையா.. அதே போல அமெரிக்கர்களிலேயே 30 சதவிகிதம் பேர் இதை நம்பவில்லை.. அது போலி புகைப்படம் என்கிறார்கள்.
ஒருகாலத்தில் அமெரிக்கர்களிடையே பர்கர் தான் மிக மிக பிடித்த உணவுப்பட்டியலில் இடம்பிடித்திருந்தது.. தற்போது அதை பிட்சா முந்திவிட்டது.. ஒரு நாளைக்கு அமெரிக்கர்கள் சாப்பிடும் பீட்சாவை அப்படியே அடுக்கினால், அது 100 ஏக்கர் அளவுக்கு இடத்தை அடைத்துக்கொள்ளும்.. தினமும் அந்த அளவுக்கு விரும்பி உண்கிறார்கள்.
இது உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்… இது அமெரிக்காவின் சிக்ஸ் ப்ளாக் பகுதியில் உள்ளது.