ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை, பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரானின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.