மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அனைத்துத் துறை அமைச்சர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தனி செயலாளர்களாக ஒரே நபரை நியமிக்க பிரதமர் மோடி கட்டுப்பாடு விதித்துள்ளார். இதையடுத்து தற்போது அனைத்து மத்திய அமைச்சர்களும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளார்.
வீட்டில் இருந்தே பணி செய்வதை தவிர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் 40 நாட்களும் வேறு இடங்களுக்கு பயணம் செய்வதை அனைத்து அமைச்சர்களும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையையும் தயார் செய்து சமர்ப்பிக்கவும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.