காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்கிறார்.
லடாக் செல்லும் மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் அப்பகுதியிலுள்ள நிலவும் சுழல் குறித்து உள்ளூர் மக்களிடம் கருத்துகளை கேட்க இருக்கிறார். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து லே பகுதிக்குச் செல்லும் ராஜ்நாத் சிங், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவ உயர் அதிகாரிகளிடம் கேட்டறிவார் எனத் தெரிகிறது. இதனையடுத்து காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு, எல்லை நிலவரம் மற்றும் மக்களின் நிலை குறித்து விரிவான அறிக்கையை அவர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.