வாடகையில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கான வாடைகயை வாங்க கூடாது மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பல்வேறு மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள், வேலை இழந்தனர். மேலும், லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் அவர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகள் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், வாடகையில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கான வாடைகயை வாங்க கூடாது உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வீட்டின் உரிமையாளர்கள் வாடகைக்கு தங்கியிருக்கும் தொழிலாளர்களையும், மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும், உத்தரவுகளை மீறும் வீட்டு உரிமையாளர்கள் மீது மாநில அரசுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.