டெல்லியில் பத்தாயிரம் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.
நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக, சத்தர்பூர் பகுதியில் பத்தாயிரம் படுக்கைகள் கொண்ட புதிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள பத்தாயிரம் படுக்கைகளில் 10 சதவீத படுக்கைகள் செயற்கை சுவாசம் அளிக்கும் வசதியுடன் உள்ளன. 450 கழிவறைகள், 300 சக்கர நாற்கலிகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறப்பு சிகிச்சை மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பார்வையிட்டனர். ஜூலை 1ம் தேதி முதல், சிறப்பு சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.