டெல்லியில் இன்று நடைபெறுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீருக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் வகையில் முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் எனத் தெரிகிறது. ஜம்மு – காஷ்மீர் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்க வழி வகை செய்ய, இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் மத்திய அமைச்சரவையின் கூட்டம் என்பதால் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

Exit mobile version