பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள், 100 நாட்களில் செயல்படுத்த வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. இந்தநிலையில், புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், நாடாளுமன்ற கூட்டத் தொடர், மத்திய பட்ஜெட் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வரும் 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் புதிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் மத்திய அமைச்சரவை விவாதித்தது. தேசிய பாதுகாப்பு ஊக்கத் தொகையை மாநில காவல்துறைக்கும் விரிவாக்கம் செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளில் ஆண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பெண் குழந்தைகளுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து ஆண்டுக்கு 500 பேருக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version