பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. காலை 11.25 மணிக்கு காணொலி மூலம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்தும், வேளாண்சட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version