கஜா புயல் நிவாரணமாக மத்திய வேளாண்துறை ரூ.173 கோடி அறிவிப்பு

மத்திய வேளாண்துறை சார்பில் கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்தித்து கஜா புயல் நிவாரணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய வேளாண் துறை சார்பில் கஜா புயல் நிவாரணமாக 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்தார். இதில் 93 கோடி ரூபாய் தென்னை மரங்கள் பாதிப்பிற்காகவும், தோட்டக் கலைத்துறைக்கு நிவாரணமாக 80 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சின்ன சேலத்தில் ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் 330 கோடி ரூபாய் செலவில் கால்நடைப் பூங்கா அமைக்கவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் ராதாமோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

Exit mobile version