யுனிசெஃப்பின் மனிதாபிமான விருதை வென்ற பிரியங்கா சோப்ரா

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளை ஏற்படுத்தி தரும் நிறுவனமான ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருது நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உறுப்பினராக உள்ளார். அவரின் சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு “டேனி கே” எனப்படும் மனிதாபிமான விருது வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி வரும் டிசம்பரில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை பிரியங்கா தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “யுனிசெஃப் விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் , மற்ற எல்லா சேவையை விட குழந்தைகளுக்கு செய்யும் சேவை மிக முக்கியமானது. இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், கல்விக்கும் போய் சேரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெஃப் அமைப்பில் அவர் பெண்கள்,குழந்தைகள் உரிமை, ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version