பொருளாதார நெருக்கடியால் 8.6கோடி குழந்தைகள் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் – யுனிசெஃப்

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தாண்டின் இறுதிக்குள், 8 கோடியே 60 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவ் தி சில்ட்ரன் மற்றும் யுனிசெஃப் இணைந்து நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையினால், இந்தாண்டின் இறுதிக்குள், 8 கோடியே 6 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்கு செல்வார்கள் என்றும், இது கடந்த ஆண்டை காட்டிலும், 15 சதவீதம் அதிகரித்து, 67 கோடியே 20 லட்சமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதிகமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள், ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருப்பார்கள் என யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர், கவலை தெரிவித்துள்ளார்.

Exit mobile version