போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வரும் நிலையில், கோவையில் கஞ்சா வியாபாரிகள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளது, கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
அன்மையில் சென்னை தலைமை செயலகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எதிர்காலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு வருவதாக வழக்கமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஆனால் தேர்தல் வாக்குறுதி போல் இதுவும் வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கஞ்சா விற்பனை குறித்த பொதுமக்கள் புகாரின் பேரில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விடியா திமுக ஆட்சியில் போதைப் பொருள் சந்தையாக, தமிழகம் மாறி உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பெயரளவுக்கு அதிகாரிகளின் மத்தியில் “போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதிகாரிகளின் மத்தியில் “போதை இல்லா மாநிலத்தை உருவாக்குவதே எங்கள் கனவு” என்று ஸ்டாலின் கூறுவது கனவாகவே கானாமல் போய்விடும் போல் தெரிகிறது. போதை புழக்கத்தை கட்டுப்படுத்துவதே லட்சியம் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், லட்சியத்தை நோக்கிச் செல்லும் அறிகுறி துளியும் தென்படவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் விமரிசித்துள்ளனர்.
Discussion about this post