திருச்சியில், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பானிப்பூரி தயாரிப்பு நிலையத்திற்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
திருச்சி, சஞ்சீவி நகர் பகுதியில் பானிபூரி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த பானிப்பூரி நிலையத்தை வடமாநிலத்தை சேர்ந்த கமல்சிங், ராஜூ ஆகியோர் இடத்தை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தனர். இங்கு சுகாதாரமற்ற முறையிலும், தரமற்ற முறையிலும் பானிபூரி தயாரிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட போது, பானிபூரி தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், அழுகிய உருளைக்கிழங்குகளை பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. பானிபூரி தயாரிப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி மாநகரிலுள்ள பெரும்பாலான பானிபூரி கடைகளுக்கு இங்கிருந்து தான் பானிபூரி அனுப்பி வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இது பானிபூரி பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.