இந்தியாவிலேயே முதல் முறையாக கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. நாட்டின் ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு அடையாளமாக இந்த ரயில் இருக்கும் என அதிகாரிகள் பெருமையடைகிறார்கள். ரயில் பாதையில் ஆற்று நீர் உள்ளே கசியாத அளவிற்கு 3 பாதுகாப்பு அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 16 கி.மீ., தூரத்திற்கு போடப்பட்டுள்ள இந்த ரயில் பாதை உப்பு ஏரி பகுதி மற்றும் அவுரா உப்பு ஏரி மைதான ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும். 5 நிறுத்தங்கள் கொண்ட இந்த ரயில் சேவை முதல் 5 கி.மீ., வரை இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.