பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 85ஆயிரத்து 268 விவசாயிகளுக்கு 277 கோடிரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு காலாண்டிற்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த திட்டம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி நாடு முழுவதும் தொடங்கிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 85ஆயிரத்து 268 விவசாயிகளுக்கு 277கோடி ரூபாய் நிதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நபர்களின் வங்கி கணக்குகள் சரிப்பார்க்கப்பட்டு அவர்களுக்கும் விரைவில் முதல் தவணை பணம் செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.