திமுக ஆட்சியில் மக்கள் இருட்டையே சந்தித்து கொண்டிருக்கின்றனர்

திமுக ஆட்சி அமைத்து இன்றுடன் ஒரு மாதம் உருண்டோடி விட்ட நிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர், திமுக-வினர் பதவியேற்ற இரண்டே நாட்களில் அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி வன்முறை கலாசாரத்தை தொடங்கி விட்டதாக சாடினார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்தவர்கள், தற்போது கடிதம் எழுவதுதாக கூறுவது, மக்களை ஏமாற்றும் செயல் என வைகைச்செல்வன் விமர்சித்தார். தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின்வெட்டு தலை தூக்க தொடங்கி இருப்பதாகவும், அது நிரந்தர மின்வெட்டாக மாறி விடமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளதாக தெரிவித்தார். நிர்வாக திறமையற்ற ஆட்சியாளர்களால் மக்கள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளாக வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.

Exit mobile version