உள்ளாடை திருடர்கள் – இலங்கை முகாமில் சேட்டை

விருத்தாச்சலத்தில் கொடியில் காயப்போடும் பெண்களின் உள்ளாடைகளை குறி வைத்து திருடி குரூர செயலில் ஈடுபடும் இச்சை வெறியர்களால் இல்லத்தரசிகள் கடும் மன உளைச்சலை சந்தித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இலங்கை முகாமில் 80 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறுகிய வீதிகள், நெருங்கிய வீடுகள் பிரச்சனைகளுடனேயே குடும்பம் நடத்த பழகிய இலங்கை தமிழர்கள், சமீபத்தில் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

வீட்டின் கொடியில் காயப்போடும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடி அதனூடாக தன் இச்சை வெறியை தீர்த்து கொள்கிறார்கள் 17 வயதுள்ள 2 சிறுவர்கள். பின் அதனை தெருக்களில் வீசி விட்டு செல்கிறனர். இதனால் அப்பகுதி பெண்கள், மிகுந்த மன உளைச்சல் உடைந்துள்ளனர்.

உள்ளாடை திருட்டு தொடர்பாக, அந்த 2 இச்சை மிருகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாச்சலம் வாழ் இலங்கை தமிழர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் உள்ளாடை திருட்டில் ஈடுபட்ட அந்த உத்தமர்களின் உறவினர்கள், நியாயம் கேட்க சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அகதி வாசிகள் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் திரண்டு புகார் அளித்துள்ளனர்

பள்ளி செல்லும் வயதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் அவர்களின் குரூர செயல்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களின் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் அந்த மனம் நொந்த இல்லத்தரசிகள்.

Exit mobile version