காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் மீறிவிட்டதாக புகார் தெரிவித்து பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு குழுவில் எழுப்பியது. பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் ஏவப்படுவதையும் அதற்கு பாகிஸ்தான் அரசும் ராணுவமும் துணையாக இருப்பதையும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி எழுதிய கடிதத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் கோரிக்கையை ஐ.நா உட்பட பிற சர்வதேச நாடுகளும் நிராகரித்துள்ளதால், இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

Exit mobile version