மகாத்மா காந்திக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்ட ஐ.நா.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா சபை சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்கில் ஐ.நா சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாகத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் ஐ.நா தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், மகாத்மா காந்திக்கு சிறப்பு செய்யும் விதமாக ஐ.நா. அலுவலகத்தில் 50 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பூங்கா அமைப்பதன் தொடக்க விழாவும், சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.

இதில், கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, காந்தி இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலக நாடுகளின் ஜனநாயகத்திற்கும் முன் மாதிரியாக திகழ்ந்துள்ளதாகவும், காந்தியை சந்திக்காத தலைவர்களும், குறிப்பாக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா ஆகியோரும் காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

இதில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசீன் லூங், தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version