ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தான் புகார்

காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்று மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், காஷ்மீர் மக்கள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் மிகப் பெரிய சிறையாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலர் விஜய் தாகுர் சிங், மனித உரிமைகள் என்ற போர்வையின் கீழ் சிலர் தீய அரசியல் உள்நோக்கம் கொண்ட காரணங்களுக்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்றும், அந்த முடிவு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்தார்.

Exit mobile version