ஐ.நா. சபையில் இந்தியா மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு

இரண்டு அணு ஆயுத நாடுகள் போரிட்டுக் கொண்டால், அதனால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா.வில் உரையாற்றிய இம்ரான் கான், இந்தியாவுடன் பல முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்ததாகவும், அதற்கு இந்தியா எந்த பதில் அளிக்கவில்லை என்றும் கூறினார். பாகிஸ்தான் மீது இந்தியா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த இம்ரான் கான், காஷ்மீரில் இந்தியா தனது ராணுவத்தை குவித்துள்ளதாக கூறினார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு, பதிலளிக்கும் உரிமையை ஐ.நா-வில் பயன்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. பதிலளிக்கும் உரிமைக் கொண்டு, பாகிஸ்தான் பிரதமரின் பொய்யான குற்றச்சாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது. இதனிடையே, ஐ.நா-வில் தலைவர்கள் உரையாற்ற 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதமர் மோடி, 17 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விதிமுறைகளை மீறி அரைமணி நேரத்திற்கு மேலாக உரை நிகழ்த்தினார். 20 நிமிடம் கடந்த பிறகு உரையை முடித்துக் கொள்ளுமாறு சிவப்பு விளக்கு எரியவிடப்பட்டு இம்ரான் கானிற்கு அறிவுறுத்தப் பட்டது. பல முறை அறிவுறுத்தியும் அதனை கண்டுக் கொள்ளாமல் இம்ரான் கான் தனது உரையை தொடர்ந்தார்.

Exit mobile version