ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களைக் குவித்தார். 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெரும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் 19-வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கி, 2 விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்து ஆட்டத்தை ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் பக்கம் திருப்பினார். இதனால் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் எண்ணினார். ஆனால் உமேஷ் யாதவ் ரசிகர்களின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்.
கடைசி ஓவரில் 2 பவுண்டரிகளை ஆஸ்திரேலிய வீரர்களை உமேஷ் யாதவ் அடிக்கவிட்டார். இதனால் பும்ராவின் உழைப்பு வீண் போனது. இந்நிலையில் ரசிகர்கள், உமேஷ் யாதவை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.