ஜம்மு காஷ்மீரை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது- உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முதன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி யாருடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், காஷ்மீர் மீது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு நன்கு புரிய வருவதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் காஷ்மீரில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், பாஜக தங்கள் மாநிலத்தை புறக்கணிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version