ஆப்கானிஸ்தானில் உக்ரைன் நாட்டு விமானம் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் உக்ரைன் நாட்டு விமானத்தை அடையாளம் தெரியாத சிலர் ஈரான் நாட்டுக்கு கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கிருக்கும் தங்களது நாட்டு மக்களை மீட்கும் பணியில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானின் கியேவ் விமான நிலையத்தில் உள்ள உக்ரைன் மக்களை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவ விமானம் கடந்த ஞாயிறன்று சென்றுள்ளது.

ராணுவ விமானத்தில், 12 வீரர்கள், 31 உக்ரைனியர்கள் உள்பட 83 பேர் பயணிக்க தயார் நிலையில் இருந்தபோது, அங்கிருந்த அடையாளம் தெரியாத சிலர், ஆயுதங்களுடன் விமானத்திற்குள் புகுந்து விமானிகளை மிரட்டியுள்ளனர்.

பின்னர், அந்த விமானத்தை ஈரான் நாட்டுக்கு கடத்திச் சென்றதாகவும், விமானத்தை மீட்க மூன்று முறை முயற்சித்தும் பலனில்லை என்றும் உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version