ரஷ்யா நாட்டு தொலைக்காட்சியுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்திய உக்ரைன் செய்தி நிறுவனத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் இயங்கி வரும் செய்தி நிறுவனமான நியூஸ் ஒன் தொலைக்காட்சி ரஷ்ய தொலைக்காட்சியான ரோசியா ஒன் என்ற தொலைக்காட்சியுடன் இணைந்து வெஸ்டி நிடிலி என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு அந்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. இதனால் அந்நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி ரஷ்யாவுடன் அரசியல் சர்ச்சைகள் உள்ள நிலையில் நிகழ்ச்சி நடத்திய நியூஸ் ஒன் தொலைக்காட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வெளியே குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீப்பந்தங்களை கொளுத்தியும், பாதாகைகளை ஏந்தியும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில், நியூஸ் ஒன் தொலைக்காட்சிக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடரப்போவதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.