தேர்தல் பிரச்சாரத்தின்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகளின் பெயர்களைக் கூறாமல் அவமதித்த உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரமேஷை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். நெல்லிக்குப்பம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசத் துவங்கினார்.
இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்து கூச்சலிட்டனர். இதன் பின்னர் கூட்டணி கட்சியினரின் பெயரை கேட்டு அறிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இந்த செய்கை கூட்டணி கட்சியினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.