பிரச்சாரத்தில் பேச தடுமாறிய உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் இயல்பாக பேசமுடியாமல் எழுதி வைத்த பேப்பரை பார்த்து பேசிய சம்பவம் தொண்டர்களை முணுமுணுக்க செய்தது. சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் திறந்த வேனில் நின்று அவர் பிரசாரம் செய்தார்.

அப்பொழுது இயல்பாக பேச தெரியாமல், கையில் எழுதி வைத்த பேப்பரை பார்த்து அவர் பேசினார். கலைஞரின் பேரனாக இருந்துக்கொண்டு இயல்பாக பேசத் தெரியாமல் அவர் திணறுவதை பார்த்து திமுக தொண்டர்கள் முணுமுணுத்துக் கொண்டனர். இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் அவர் பிரசாரம் மேற்கொண்டதால், அங்கு 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. திமுகவின் இந்த பிரசாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version