உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் தாய்மார்கள் அவதி

உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்திற்கு இரண்டு மணிநேரம் தாமதமாக வந்ததால், தாய்மார்களும், தொண்டர்களும் வெயிலில் அவதி அடைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், காலை 7 மணிக்கு பிரச்சாரத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தாய்மார்களும், தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால், உதயநிதி ஸ்டாலின் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்தார். இதனால், திமுக மற்றும் கூட்டணி தொண்டர்கள் வெயிலில் நிற்க முடியாமல் அவதி அடைந்தனர்.

அவர்கள், அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் பயணிகள் நிற்க இடமின்றி தவித்தனர். சாலையில் வெடிகளை வைத்தும், வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியும் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதால், தாம்பரம்-செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version