நோயற்ற தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை –  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நோயற்ற தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். மதுரை ராஜாஜி சிலை அருகே ஆரம்பித்த இந்த பேரணி, உசிலம்பட்டி சாலை, சந்தைப்பேட்டை, புதுநகர் வழியாக சென்றது. இந்த பேரணியில் அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் நடராஜன், வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், நூறு சதவிதம் டெங்கு, பன்றிக்காய்ச்சல் இல்லாத மாநிலத்தை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

 

 

 

Exit mobile version