32 வருவாய் மாவட்டங்களிலும் பேரிடர் தடுப்பு முன்னேற்பாடுகள் தயார்நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீரின் அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். 662 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு , மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறினார்.
6ஆயிரத்து 812 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். மேலும் ஆயிரத்து 265 இடங்களில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும் உதயகுமார் தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீண்ட கால தடுப்பணைகள் அமைப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பபட்டு வருவதாகவுவம் அவர் கூறினார். கடந்த கால அனுபவம் இந்த காலகட்டங்களில் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.