மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் வருகிற 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசிற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தவ் தாக்கரேவிற்கு 166 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால், அவரது தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது.