மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சிவசேனா கூட்டணி 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில், பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும்பான்மையை பிடித்தது. இந்தநிலையில், ஆட்சியை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்ததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஒருபுறம் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில், ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், மறுபுறம் பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக அஜித் பாவாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதை எதிர்த்து சிவசேனா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, துணை முதலமைச்சர் அஜித் பவார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ராஜினாமா செய்ய, அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி சார்பில், உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, சிவசேனா கூட்டணியை மீதான நம்பிக்கை வாக்குகெடுப்பில், 169 வாக்குகள் பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.