உதயநிதியின் எம்.எல்.ஏ. பதவி தப்புமா..?

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின், திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பதவி தப்புமா…? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவரது வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், உதயநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது வேட்புமனு ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version