திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு தனது தந்தை ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் தாமதமாக வந்ததால் கூட்டத்தினர் அதிருப்தி அடைந்தனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து செங்கம் – போளூர் சாலையில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த கூட்டத்திற்கு 5 மணிநேரத்திற்கும் மேல் தாமதமாக வந்த உதயநிதி, திட்டங்கள் குறித்த புரிதல் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பேசியதால் கூட்டத்தினர் அதிருப்தி அடைந்தனர்.
தேர்தல் ஆணைய விதிமுறையை மீறி சட்டமன்ற வளாகம் முன்பு சந்தை மைதானத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து மினிவேன் உள்ளிட்டவற்றின்மூலம் சாரை சாரையாக ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் அழைத்துவரப்பட்டதால் பெரியளவில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.